Wednesday, December 26, 2007

அழிக்கப்பட்ட திராவிட சிற்பங்கள்

தில்லி குதுப் மினார் வளாகத்தில் உள்ள திராவிட(தமிழ்)பாணியில் கட்டப்பட்ட சமணக் கோவில்களின் எஞ்சிய சிதைவுகள்





உருவ வழிபாடு கூடாது என்னும் 'செமிடிக்' (Semitic, common for all three religions namely, Judaism, Christianity and Islam)கோட்பாட்டை மூடத்தனமாகப் பின்பற்றிய ஆப்கானியக் காட்டுமிராண்டிகள் எந்த ஒரு மனித உருவம் கொண்ட கலைப் படைப்புகளையும் பொறுத்துக் கொள்ளவில்லை. கீழே உள்ள புகைப்படத்தில் ஒரு தூணில் உள்ள அழகான பெண்ணின் உருவம் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.(புகைப்படம்: தில்லியில் உள்ள குதுப் மினார் வளாகத்திலுள்ள திராவிட பாணிக் கட்டடங்களிலிருந்து)


ஆப்கானியர்களின் படையெடுப்புகளுக்கு முன்னர் இந்த வளாகத்தில் 27 சமணக் கோவில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவில்களின் அழிபாடுகளை இன்றும் காணலாம். இக்கோயில்களில் இருந்த கருங்கற்கள் மற்றும் செங்கற்களைக் கொண்டே குதூப் மினார் கட்டப்பட்டுள்ளது. ஆப்கானியப் படையெடுப்புகளுக்கு முன்னரே இச் சமணக் கோவில்கள் பிராமணியத்தை ஆதரித்த குப்த அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் அவற்றை வேதிய பிராமணர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கலாம் என்று் கருதப்படுகிறது. சமண முனிவர்களைத் துரத்திவிட்டு வேதிய பிராமணிய வழிபாட்டுத் தலங்களாக இக்கோவில்கள் மாற்றப்பட்டன. குப்தர் காலத்தைச் சேர்ந்த இரும்புத் தூணும் இதே வளாகத்திலேயே காணப்படுகிறது. இத்தூண் வானியல் ஆராய்ச்சிக்குப் பயன்பட்டதாகக் கருதப்படுகிறது.

No comments: